MarkAntonyTeaser [Image Source : Twitter/@VishalKOfficial]
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி டீசர்
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ் ஜே சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றே கூறலாம்.
டீசர் விமர்சனம்
படத்தின் டீசரை பார்த்த பலரும் அருமை படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் எனவும், விஷால் சினிமா கேரியரில் இந்த படம் ரொம்பவே புதுசு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் வாழ்த்து
இன்று காலை மார்க் ஆண்டனி படக்குழு நடிகர் விஜய்யை சந்தித்து படத்தின் டீசரை போட்டு காமித்தனர். டீசரை பார்த்த விஜய் அருமையாக இருப்பதாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…