திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூரில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலை மற்றும் கலைக்கல்லூரி அமைக்கப்படும என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MKStalin - Thiruvarur

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் (ஜூலை 9) இன்றும் (ஜூலை 10) இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நேற்றைய தினம் முதலமைச்சர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு பயணித்து, அங்கிருந்து கார் மூலம் திருவாரூர்  வந்தடைந்தார். திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி, தூர்காலயா ரோடு, தெப்பக்குளம் தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ. தூரம் நடைபயணம் (ரோடு ஷோ) மேற்கொண்டு, பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார்.

திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைக்க செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ரெயில்வே மேம்பாலம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.

இன்றைய தினம்திருவாரூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது, அந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”திருவாரூர் மாவட்ட மக்கள் 66 அனைவருமே ‘எங்களில் ஒருவன்’ என என்னை அன்போடு அழைக்கிறார்கள். கலைஞர் ஆட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.

திருவாரூர் என்றாலே தேரும், தலைவர் கலைஞரும் தான் நினைவுக்கு வரும். இந்த மண்ணில் பிறந்த கலைஞர் தான் தனது அறிவால், ஆற்றலால் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று, தொலைநோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியிருக்கிறார்” என்றார்.

இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

என்னென்ன அறிவிப்புகள் :

  • திருவாரூர் நகர்ப் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம்.
  • நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்.
  • மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்.
  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
  • பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  • பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்