சினிமா

நமக்கு எப்படி செட் ஆகும்? ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்! படமோ சூப்பர் ஹிட்…

Published by
பால முருகன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் எந்த அளவிற்கு பிரமாண்டம் இருக்கிறது என்பதை பற்றி சொல்லி தெரியவேண்டாம். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். அந்த அளவிற்கு பிரமாண்டமாக பல படங்களை எடுத்து பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளார். அப்படி ஒரு திரைப்படம் தான் அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் , மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘முதல்வன்’.

இந்த திரைப்படம் அந்த சமயம் மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்றே கூறலாம். இந்த முதல்வன் படத்திற்கு முன்னதாக ஷங்கர் ஜீன்ஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஜீன்ஸ் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனா நிலையில், அவர் அடுத்ததாக முதல்வன் படத்தை இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது.

எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல படமும் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரித்திகாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது.

குறிப்பாக ஷங்கர் இந்த படத்தின் கதையை நடிகர் அஜித்திடம் கூறியதாகவும் பிறகு அஜித் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பார்த்திருப்போம். ஆனால், இப்போது கிடைத்த தகவல் என்னவென்றால், முதல்வன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தையும் நடிக்க வைக்க அந்த சமயம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளதாம்.

இயக்குனர் ஷங்கர் ஒருமுறை படத்தின் கதையை நடிகர் ரஜினிகாந்திடம் கூறினாராம். கதையை கேட்டுவிட்டு ரஜினிகாந்த் கதை சூப்பராக இருக்கிறது நான் இந்த படத்தை செய்தால் சரியாக இருக்காது. நமக்கு எப்படி இந்த படம் செட் ஆகும்? என கேட்டாராம். படம் அரசியல் கதையை  வைத்து மையமாக எடுக்கப்பட்ட காரணத்தால் படத்தில் நடிக்க நடிகர் ரஜினி  மறுத்துவிட்டாராம்.

ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுக்க அடுத்ததாக படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் அர்ஜுனிடம் கூறினாராம். அர்ஜுனுக்கு படத்தின் கதை பிடித்து போக அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தில் நடித்தாராம். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அர்ஜுனுக்கும் அந்த சமயம் இந்த படத்தால் மார்க்கெட் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

10 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

28 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

51 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago