சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி அண்மையில் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டது. இந்த நிலையில், கூலி படத்திற்காக ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, சென்னை விமான நிலையம் சென்ற அவரிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என ஆல்ரெடி சொல்லிருக்கேன்” ஓகே, […]
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, ‘திரு மாணிக்கம்’ என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி தவிர பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார், அறிக்கை வாயிலாக தனது […]
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் பகுதிகள், கோவை என பல்வேறு பகுதிகளிலும் புத்தான்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டு தினத்தை தெய்வீக வழிபாட்டுடன் பிரசித்திபெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பூஜைகள், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பபுத்தாண்டை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாட்சா படத்தின் வசனத்தை […]
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார். இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,” மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி , ‘அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். குணாநிதி எனும் புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாய்கள் மற்றும் மனிதர்கள் […]
சென்னை : இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்கள் அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது திடீர் சர்ப்ரைஸாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து முதல் பாடலான சிக்கிடு வைப் (Chikitu Vibe) பாடலுக்கான முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் வரும் இசை வழக்கம் போல் அனிருத் […]
சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு […]
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, […]
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு, மாவீரர் நாள் கூட்டம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை பேசினார். நான் சங்கி இல்லை, நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு பற்றிய செய்திகள் என பல்வேறு உலாவல்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். அவர் பேசுகையில், எனக்கும் […]
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த விழாவுக்கு அதிமுக பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் முதலில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் எடப்பாடி வழங்கினார். அதன்பிறகு, ஜானகியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி […]
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகிறார் என்றதும் வன்மையாக எதிர்த்தார். மேலும், அரசியல் மேடைகளில் ரஜினியைக் கண்டித்தும் பேசியிருப்பார். ஆனால், நேற்று சீமான் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் பல கதைகளை பேசி வந்தனர், குறிப்பாக சீமான் அரசியல் நிமித்தமாக ரஜினியை சந்தித்து பேசியிருப்பார் என்றெல்லாம் பேசி […]
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற சாதனையையும் அவருக்கு படைத்துக்கொடுத்து இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் அமரன் படம் தான் இருக்கிறது. முதலிடத்தில் உலகம் முழுவதும் 440 கோடிகாள் வரை வசூல் […]
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியை சந்தித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமான ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு […]
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு நாளை 11 மணி அளவில் நடைபெறும் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்து இருந்தார். எனவே, அவருடைய உறவினர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்தி, சத்யராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரடியாகச் சென்று தங்களுடைய அஞ்சலியைச் […]
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை ரஜினியைப் போலப் பல நிகழ்ச்சிகளில் பேசியும் ரஜினி தான் தன்னுடைய குரு என்று கூறி நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவிற்குள் வந்தபிறகும் அவருடைய படங்கள் வெளியானால் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துவிடுவார். இப்படி அவர் மீது அன்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு முறையாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிப்பாரா என்பது தான் ரசிகர்களுடைய பெரிய ஆசையாகவும் […]
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த படம் எடுக்கப்பட்ட காரணத்தால் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது. ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி […]
சென்னை : பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புயலைக் கிளப்பி மக்களை எமோஷனலாக கண் கலங்க வைத்துள்ள அமரன் படத்தைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, சினிமாவில் அனுபவம் வாய்ந்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமரன் படத்தினை பார்த்துவிட்டு தனது […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் அதனைப் பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியதே இல்லை. அப்படி தான் தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள அமரன் படத்தையும் பார்த்துவிட்டு படத்தில் பணியாற்றியவர்களை தனித்தனியாகப் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் பாராட்டிப் பேசியதற்காக வீடியோவையும் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்து இருக்கிறார் . படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய அழுகையை அடக்கிக் கொள்ளமுடியாமல் எமோஷனலாக பேசிய ரஜினிகாந்த் முதலில் […]
சென்னை : அசோக் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட் அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகியுள்ள காரணத்தால் மக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்று வருகிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் பார்க்கும்போது மிகவும் எமோஷனலாக இருந்த காரணத்தால் படம் பார்த்துவிட்டு மக்கள் கண்கலங்கிய மாதிரி தான் வெளியே வருகிறார்கள். […]