கேரளா :ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
தற்போது, ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கிறார். அங்கு படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அட்டப்பாடியில் தனது காரில் இருந்து ரசிகர்களை வாழ்த்தும் ஒரு சமீபத்திய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அங்கு கூடிய ரசிகர்கள், ‘தலைவா.. தெய்வமே’ என கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். இதில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் படுவைரலாகி வருகிறது.
#Jailer2 – Yet another day with fans greetings!#Rajinikanth #Superstar #Thalaivar 🤘 pic.twitter.com/OnrVV8QTV1
— Rajini✰Followers (@RajiniFollowers) April 21, 2025
வெறும் கையில் சூடத்தை ஏற்றி, ஆராதனை காட்டி அவர் சூப்பர் ஸ்டாரை வரவேற்றார். ரஜினி காரில் இருந்து கையெடுத்து கும்பிட்டபடியே வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
பொன்னான ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நீ …
கொண்டாட எங்களுக்கு
சாமி தந்த சாமி நீ …Love You Thalaiva … #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #Jailer2 @rajinikanth #BinaryPost pic.twitter.com/z47CbAPsbf
— Binary Post (@BinaryPost001) April 22, 2025
ரஜினிகாந்த் மார்ச் மாதம் சென்னையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பைத் தொடங்கினார், ஏப்ரல் 11 ஆம் தேதி, படப்பிடிப்பை மீண்டும் தொடர கேரளா வந்தார். இந்த இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து நடித்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனனும் இணைந்தனர்.
