'ஒரு அற்புதமான மனிதர்..' பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

மன்மோகன் சிங் மறைவுக்கு, 'அவரை இழந்துவாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Rajinikanth -Manmohan singh

சென்னை:முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார்.

இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,” மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர். அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறினார்.