dhanush and sivakarthikeyan [fiile image]
சென்னை : பொது மேடைகளில் பிரபலங்கள் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக வெடிப்பது சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி தான் தற்போது சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா (ஆக-13) சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள காரணத்தால் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் ” நான் வந்து யாரையும் கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான் தான் வாழ்க்கைக் கொடுத்தேன்…இவுங்கள நான் தான் ரெடி பண்ணேன் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டார்கள்.
நான் தான் வாழ்கை கொடுத்தேன் என்று சொல்லும் ஆள் நான் கிடையாது. என்னை பொறுத்தவரை என் நண்பர்களைப் போல அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவ்வளவுதான்” என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயன் மறைமுகமாக தனுஷை டார்கெட் செய்து தான் பேசி இருக்கிறார் என கூற, அதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட தொடங்கிவிட்டார்கள்.
தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்ட, சிவகார்த்திகேயன் தனுஷுக்கு தான் சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்திருக்கிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு வருகிறார்கள். மேலும், சிவகார்த்திகேயனின் ஆரம்ப சினிமா வளர்ச்சியில் தனுஷிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மறுக்க முடியாத ஒரு உண்மை தான்.
ஏனென்றால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அந்த படத்தை தயாரித்து கொடுத்தார். சிவகார்த்திகேயன் இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கூட எதிர்நீச்சல் படம் தான் அவருடைய மார்கெட் வளர பெரிய உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…