CookWithComali5 [file image]
Venkatesh Bhat : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட். இவர் இதுவரை நடந்த 4 குக் வித் கோமாளி சீசன்களிலும் நடுவராக இருந்து வந்த நிலையில், 5-வது சீசனில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்து இருந்தார். என்ன காரணத்துக்காக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறித்து அவர் கூறவில்லை.
திடீரென அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வீடியோ வெளியீட்டு அறிவித்து இருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து, நேற்று குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இன்று காலை வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் பேசியதாவது ” நீங்கள் எல்லோரும் என்னை மிஸ் செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. நீங்கள் அனுப்பிய மெசேஜ் அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இதனை எல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பவே குடுத்து வைத்தவன் என்று நினைக்கிறேன். என்னைக்குமே நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என்னைக்கும் உங்களை நான் விட்டு கொடுக்கமாட்டேன்.
உங்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது. இன்றிலிருந்து காலை 8 மணிக்கு சன் தொலைக்காட்சி பாருங்கள் அது உங்களுக்கு தெரியும். என் மீது நீங்கள் காட்டும் அன்பிற்கு ரொம்பவே நன்றி” என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் திரும்ப நீங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்பது போல கூறிக்கொண்டு வருகிறார்கள்.
மேலும், சன் தொலைக்காட்சியை பாருங்கள் என கூறிய வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி தான். கடந்த 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக இருந்த பிரபல நிறுவனமான மீடியா மேசன்ஸ் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து ஒரு புது சமையல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். விரைவில் இந்த நிகழ்ச்சிக்கான விவரமான தகவல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…