சினிமா

யாருக்காகவும் நான் அதை மாத்திக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த பவா செல்லதுரை..கண்ணீர் விட்ட பிரதீப்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டுள்ளார். இவருடைய கதைக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களுக்கு பிடிக்கும் படி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கதைகளை கூறி வருகிறார்.

இருப்பினும் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருக்காமல் சற்று லிமிட் ஆகவே அனைவரிடமும் பேசி தனியாகவே இருப்பது போல பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இவர் தனியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஏதோ ஒரு கும்பல் கூட்டத்தில் சாரை விட்டு விட்டீர்கள் என கலாய்க்கவும் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லதுரை மீது மிகவும் அன்பு கொண்டுள்ள பிரதீப் கண்கலங்கி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பிழையை பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லதுரை  பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிரதீப் பிழையை பற்றி பேசியதால் நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பவா செல்லதுரை சார்.

உங்களை என்னுடைய குருவை போல நான் பார்க்கிறேன் என கூறி சற்று எமோஷனலானார். பிறகு உங்களுடைய அறிவை நான் ரசிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வெளியே எச்சில் துப்புகிறீர்கள் அதனை ஒரு காரணமாக வைத்து இங்கு இருப்பவர்கள் உங்களை வெளியேற்றிவிட கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்களுடன் நான் நீண்ட நாட்கள் பயணம் செய்ய விரும்புகிறேன்.

எனவே, எனக்காக நீங்கள் தயவு செய்து அனைவரிடமும் சகஜமாக பழகி இருந்தால் நன்றாக இருக்கும் என கண்ணீருடன் பிரதீப் கேட்டுக்கொண்டார். அதற்கு பவா செல்லதுரை நான் என்னுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டேன். நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த காரணம் பணம் சம்பாதிப்பதற்கு அல்ல. எனக்கு தெரியாமல் எனக்குள் எதாவது இருந்தால் அதனை இந்த பிக் பாஸ் வெளியே கொண்டு வரும் என்பதற்காக தான்.

எனவே என்னுடைய இயல்பை நான் யாருக்காகவும் எப்போதும் மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பிரதீப் நன்றாக நடித்து மக்கள் மனதை கவர முயற்சி செய்கிறார் என கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago