காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!
பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு, ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகள் மூன்று பேர் தங்கள் மறைவிடத்தில் மறைந்திருந்தது ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையின்போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகள் மூன்று பேர்பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில் அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தஞ்சம் புகுந்ததை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன. இது கடந்த மூன்று நாட்களில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டாவது என்கவுண்டராகும். கடந்த செவ்வாய்க்கிழமை (அதாவது, மே 13), ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Drone footage captured the anxious moments before three JeM terrorists were killed in a massive gunfight with security forces in Jammu Kashmir’s Tral..
The operation reflects India’s technological edge and surgical precision…Youth lured into terror must introspect: Is this… pic.twitter.com/eYmtGva3Uw
— Fatima Dar (@FatimaDar_jk) May 15, 2025
இன்று அதிகாலை, புல்வாமாவில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. அந்த தகவலின் பேரில், காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு, இந்த மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆசிப் அகமது ஷேக், அமீர் நசீர் வானி மற்றும் யாவர் அகமது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது உடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.