இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.தமிழகத்தில் மட்டும் இந்த படம் 400 திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.
இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் இந்தப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 1000 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படம் வெளியான 12 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்க, யாஷ் உடன் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…