வசூலில் மிரட்டும் கருடன்! 5 நாட்களில் இத்தனை கோடிகளா?

கருடன் வசூல் : சூரி நடிப்பில் கடந்த மே 31-ஆம் தேதி வெளியான கருடன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு வசூல் ரதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவலும் கிடைத்து இருக்கிறது.
அதன்படி, கருடன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் படம் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது . படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படம் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா,சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மிமீ கோபி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025