11 Years of Thuppakki [File Image]
வழக்கமான தீபாவளி தினம், தியேட்டரில் வழக்கமாக விஜய் படத்திற்கு இருக்கும் அதே பிரமாண்ட ஓப்பனிங், முந்தைய ‘நண்பன்’ பட சூப்பர் ஹிட் என்ற தெம்புடன் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. முதல் நாள் காட்சி வெளியான பிறகு திரையரங்கிற்கு சூறாவளி போல மக்கள் படையெடுத்தனர் என்றே கூறலாம்.
அதுவரையில் திரையில் பார்த்த கமர்சியல் ஹீரோ விஜய்க்கு புது அடையாளத்தை கொடுத்து இருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி ஒரு விஜயை தான் தேடிக்கொண்டு இருந்தோம் என தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் தாண்டி பல்வேறு இடஙக்ளில் விஜயை கொண்டாடினர். படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.
வெங்கட்பிரபு பார்ட்டியில் கலந்து கொள்ளாத விஜய்! காரணம் என்ன தெரியுமா?
படத்தின் ரிலீஸ் சமயத்தில் படத்தின் தலைப்பு, முதல் போஸ்டரில் விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கிறார், இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை காட்சிகள் என பிரச்சனைகளையும் சந்திக்க தவறவில்லை தளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படம். படத்தலைப்பு பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில காட்சிகள் வெட்டி தூக்கப்பட்டு படம் வெளியாகி இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் பட வசூல் என பலரும் வாயடைத்து போனார்கள்.
ஸ்லீப்பர் செல் எனும் தீவிரவாத பிரச்னையை படத்தில் சிறப்பான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக கூறியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். முருகதாஸின் திரைக்கதை மொழியை திரையில் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ஆக்சன் காட்சிகளை கூட இவ்வளவு அழகாக எடுக்க முடியுமா என்றபடி காட்சி படுத்தி இருந்தார் சந்தோஷ் சிவன்.
படத்தில் அடுத்த மிக பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ். படத்தின் பின்னணி இசை இப்போது கேட்டாலும் புல்லரித்து விடும். பாடல்களுக்கு தனி கட்டுரையே எழுதலாம். மேலும் நீண்ட வருடத்திற்கு பிறகு தளபதி விஜயை பாட வைத்து தற்போது லியோ வரை தொடர்வதற்கு முக்கிய காரணம் ஹாரிஸ் ஜெயராஜின் கூகுள் கூகுள் பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வருடத்தின் முதல் 100 கோடி திரைப்படம் , கேரளாவில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல், மொத்தமாக 170 கோடி ரூபாய் வசூல் என வசூல் வேட்டையாடி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் விதமாக பலரும் #11YearsOfThuppakki என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் துப்பாக்கி பட நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…