Actor Vijay
காமராஜர் பிறந்தநாள் அன்று இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் சமீபகால நடவடிக்கைகள் அவர் வரும் காலத்தில் வெகு சீக்கிரத்தில் அரசியலில் நேரடியாக களமிறங்க உள்ளார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் விழியாகம், விலையில்லா விருந்தாகம் , குருதியகம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் , 234 தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10, 12வது வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை, சிறப்பு பரிசு வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தனது பனையூர் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
தற்போது வெளியான தகவலின் படி, வரும் ஜூலை 15ஆம் தேதி காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அன்று முதல் இலவச இரவு பாடசாலை திட்டம் துவங்க உள்ளார் எனவும் , அதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் மாணவர்கள் பயன்பெற ஏற்பாடு செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…