மூன்றே நாட்களில் 402 கோடி! ‘சலார்’ படத்தின் மிரட்டல் வசூல்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராமச்சந்திர ராஜு, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜாக்கி மிஸ்ரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!
விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 178 கோடி வசூல் செய்திருந்தது. அதற்கு அடுத்ததாக இரண்டாவது நாளில் படம் 295 கோடி வசூல் செய்து இருந்தது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து மூன்றாவது நாளில் படம் 400 கோடி வசூலை தொட்டுள்ளது. அதன்படி, சலார் படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 402 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட பட்ஜெட்டை தாண்டி படம் வசூல் செய்துள்ள காரணத்தால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025