lal salaam movie [file image ]
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார. படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்க்கை அதிகமாக்கி இருந்தத. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகாது என தகவல்கள் பரவி கொண்டு இருந்த சமயத்திலும் கூட படம் பொங்கலுக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி படக்குழு லால்சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டு இருக்கிறதாம்.
சில காரணங்களால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி லால்சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் வெளியாக இருந்தது. இதனையடுத்து, தற்போது அந்த பொங்கல் போட்டியில் இருந்து லால்சலாம் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி என்னவென்பதை படக்குழு அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…