அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்.. கைகொடுக்கும் சீமான்?

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணையவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட, இருவரும் பேட்டிகளின் மூலம் படத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விரைவில் இவர்கள் இணையவுள்ள படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். சமீபத்தில் தான் சீமானை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து படம் பற்றி பேசினாராம். அப்போது படத்தில் நடிக்க சீமான் சம்மதம் தெரிவித்துள்ளாராம். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது சீமான் நடிக்கவுள்ள தகவல் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை தெரிவிக்கும் பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருந்தாலும் சீமான் நடிப்பிலும், ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஏனென்றால், சிவகார்த்திகேயன் படத்திற்கு முன்னதாகவே, சீமான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘LIC’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025