JawanBoxOffice [File Image]
பதான் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் வெளியான 10 நாட்களில் மொத்தமாக 797 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அடுத்ததாக 11 நாட்களில் படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜவான் திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 858 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெளியான 11 நாட்களில் ரூ.858.68 கோடி வசூலித்துள்ளதன் மூலம் குறுகிய காலத்தில் மைல்கல்லை எட்டிய படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 11 நாளில் வெறும் ரூ.492.50 கோடியை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழும் படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்பதற்காக வில்லனாக நடிகர் விஜய்சேதுபதியையும், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் அட்லீ நடிக்க வைத்தார். படத்தில் அவர்கள் நடித்த கதாபாத்திரமும் கொண்டாடப்பட்டடு பாலிவுட்டிலும் இவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…