2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!
லார்ட்ஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் நான்காவது நாள் இன்று. இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் 387 ரன்களில் முடிந்தது. இப்பொது, இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.
அதன்படி, மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. பென் டக்கெட் (12), ஓலி போப் (4), ஜாக் க்ரௌலி (22) மற்றும் ஹாரி புரூக் (23) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். தற்போது ஜோ ரூட் 17 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதில், இந்த போட்டியில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பென் 12 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார், ஓலி 4 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். அதன்படி, சிராஜ் இந்தப் போட்டியில் 6 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பின்னர், நிதிஷ் ரெட்டி ஜாக் க்ரோலியை பெவிலியனுக்கு அனுப்பினார். அதனை தொடர்ந்து, ஆகாஷ்தீப் ஹாரி புரூக்கை பெவிலியனுக்கு அனுப்பினார். நான்காவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 2 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸும் 387 ரன்களில் முடிந்தது. மூன்றாவது நாளில், கே.எல். ராகுல் இந்தியாவுக்காக சதம் அடித்தார். அவரைத் தவிர, ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தனர். .