அசால்ட் சேதுவாக பாலிவுட்டில் களமிறங்கும் முன்னனி நடிகர்! ஜிகர்தண்டா ரீமேக் அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினையும், தேசிய விருதும் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த படம் தற்போது தெலுங்கில் வாலமீகி எனும் தலைப்பில் தயாராகி வருகிறது. அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
அதேபோல ஹிந்தியில் இப்படம் தயாராக உள்ளது. பாலிவுட்டில் முன்னனி நடிகர் சஞ்சய் தத் பாபி சிம்ஹா ரோலில் நடிக்க உள்ளார். சித்தார்த் ரோலில் பரண் அக்தர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025