Categories: சினிமா

Kaadhal Parisu : அக்கா தங்கை ஒன்றாக நடித்த ‘காதல் பரிசு’! கவர்ச்சி போய் கன்னத்தில் கைவைத்த அம்பிகா!

Published by
பால முருகன்

நடிகை அம்பிகா அந்த சமயம் தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தவர். கவர்ச்சியாக மட்டுமின்றி கதைக்கு முக்கிய துவம் இருக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து இருக்கிறார். அந்த சமயம் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், இவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனதற்கு ‘காதல் பரிசு’ திரைப்படம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

இயக்குனர் ஏ . ஜகந்நாதன் இயக்கத்தில் கடந்த 1987- ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த காதல் பரிசு திரைப்படத்தில் அக்கா தங்கையான ராதா, அம்பிகா இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.  மிகபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தில் ஜெய்சங்கர், டி. கே. எஸ். நடராஜன், பூர்ணம் விஸ்வநாதன், ராஜ்குமார் சேதுபதி, ஜனகராஜ் , டெல்லி கணேஷ், ரவி ராகவேந்திரா, சிவராமன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தின் கதை வழக்கமாக படமாக இருந்த காரணத்தால் படம் தோல்வியை சந்தித்தது. அதைப்போல, படத்தில் ராதா, அம்பிகா இருவருடைய நடிப்பும் அருமையாக இருந்தால் கூட இருவரும் நடித்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை.

அந்த சமயமே இந்த காதல் பரிசு திரைப்படத்தை பார்த்த பலரும் படத்திற்கு இருவரும் செட் ஆகவில்லை எனவும் அக்காவும், தங்கையும் இணைந்து ஒரே படத்தில் நடித்திருந்தது செட் ஆகவில்லை என்றும் கூறினார்கள். இதன் காரணமாக தான் படம் தோல்வி அடைந்தது எனவும் பலர் கூறினார்கள். கவர்ச்சி கதாபாத்திரம், ஹீரோயின் கதாபாத்திரம், குடும்ப கதாபாத்திரம் என எல்லா காதாபாத்திரத்திலும் கலக்கும் அம்பிகாவுக்கு இந்த படம் மிகப்பெரிய  தோல்வியை கொடுத்தது.

இதனால் அம்பிகாவுக்கு இந்த படத்திற்கு பிறகு பெரிதாக சில மாதங்கள் பட வாய்ப்புகளும் வரவே இல்லயாம். இந்த படத்திற்கு பிறகு நடிகை அம்பிகா கவர்ச்சியாக நடிக்க மாட்டார் அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் எல்லாம் கொடுக்காதீர்கள் எனவும் பத்திரிகைகளில் செய்திகள் பரவ இந்த படத்தின் மூலம் அவர் கவர்ச்சியாக நடிப்பதும் போய்விட்டதாம்.

காதல் பரிசு படத்தில் நடித்தால் நம்மளுடைய மார்க்கெட் எங்கயோ போகும் என எண்ணி நடித்த அம்பிகாவுக்கு இந்த படம் தோல்வியை கொடுக்க அந்த சமயம் கன்னத்தில் கைவைத்து சோகத்தில் இருந்தாராம். மேலும் நடிகை அம்பிகா கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் சீனியர் ஹீரோக்கள் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

16 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

1 hour ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

2 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

3 hours ago