கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
சம்பவம் நடந்த உடனே, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவும், குற்றப்புலனாய்வு துறையும் இணைந்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர்.
விசாரணையின் ஆரம்பத்தில் குற்றவாளி குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. சிசிடிவி காட்சிகள், ரயில்வே மேற்பார்வை கேமரா பதிவுகள், மற்றும் பொதுமக்களின் வாக்குமூலங்களை வைத்து காவல்துறையினர் நடவடிக்கைகளை விரைவுபடுத்தினர்.
காவல்துறை எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிர விசாரணையில் இறங்கியது. குற்றவாளி தலைமறைவாகி விட்டதால், பல்வேறு மாநிலங்களில் தகவல்தொடர்பு வைத்து விசாரணை நடந்தது. பல இடங்களில் தேடல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. 14 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு தேடப்பட்ட குற்றவாளி கைது செய்ய பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் ராஜூ விஸ்வகர்மா. வயது 35. இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் வேலை தேடி வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிறுமி மீது நடந்த வன்கொடுமை குற்றச்சாட்டில் இவர் நேரடியாக ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிறகு, சிறுமியின் முன்னிலையில் குற்றவாளியை கொண்டு சென்ற போலீசார், அவரை அடையாளம் காணச்செய்தனர். சிறுமி உறுதியாக அந்த நபரை அடையாளம் காட்ட, போலீசாரும் உறுதி செய்து மேலும் விசாரணை செய்தனர்.
இதே சந்தர்ப்பத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது. அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முந்தைய நாள், அருகிலுள்ள ரயில்வே பகுதியில் நடந்துகொண்டிருந்த ஒரு இளம் கர்ப்பிணி பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். அதனை உணர்ந்த அந்த பெண், துணிச்சலுடன் செயல்பட்டு, அவரை திட்டி துரத்தி விட்டதால்தான் அவர் கைவிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ராஜூ விஸ்வகர்மாவை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கின் தீவிரத்தையும், தொடர்ந்து விசாரணை தேவைப்படும் நிலையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. தற்போது அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025