kamal haasan about vijayakanth [File Image]
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது ” விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் நானும் அவரும் ஒருமுறை சந்தித்து பேசினோம். அந்த சமயம் அவர் என்னிடம் எப்படி பாசத்தோடு பழகினாரோ அதே போல தான் பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் பழகினார். அவருடைய எண்ணமே ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் தான் பட்ட அவமானங்கள் வேறு யாருக்கும் வந்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.
கேப்டனை நினைத்து வடிவேலு அழுதிருப்பார்! சரத்குமார் பேச்சு!
விஜயகாந்த் அவருடைய குரல் மற்றவர்களுக்காக போராடும் குரல். சினிமா துறையில் இருக்கும்போது நடிகர்களுக்காக குரல் கொடுத்தார். அதைப்போல அரசியலில் அவர் வருகை தந்த பின் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். தனிப்பட்ட முறையை அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், அவருடைய கோபத்தை தான் நான் சொல்வேன். அவருடைய கோபம் நியாயமான கோபமாக இருக்கும். அவருடைய நியாமான அந்த கோபங்கள் நடிகர் சங்கத்துக்கும் உதவி செய்து இருப்பதாக நான் நினைக்கிறேன். கேப்டன் விஜயகாந்திற்கு ஒரு தைரியம் உண்டு. அது என்னவென்றால், தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் தான். அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
அதில் முக்கியமாக நான் மேலே குறிப்பிட்டு சொன்னது போல அந்த மாதிரியான குணாதியசங்களை பின்பற்றலாம். அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” எனவும் சற்று கண்கலங்கியவாறு கமல்ஹாசன் விஜயகாந்த் பற்றி பேசினார்.
லண்டன் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜூலை 23-26, 2025 அன்று இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில்…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…
அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…
டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…