பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!

WWE மல்யுத்தப் போட்டியில் முக்கிய வீரராகத் திகழ்ந்து 90s கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹல்க் ஹோகன் (71) அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார்.

Hulk Hogan WWE

அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய தினம் (ஜூலை 24) புளோரிடாவின் கிளியர்வாட்டரில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த தகவல் பல செய்தி நிறுவனங்களாலும், WWE நிறுவனத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவரது உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போலியா (Terry Gene Bollea), ஹல்க் ஹோகன் 1980களில் தனது “ஹல்கமேனியா” (Hulkamania) காலகட்டத்தின் மூலம் மல்யுத்தத்தை உலகளவில் பிரபலப்படுத்தியவர். அவர் ஆறு முறை WWE சாம்பியனாகவும், மல்யுத்த உலகில் ஒரு புராண நாயகனாகவும் திகழ்ந்தார்.

அவரது தனித்துவமான பொன்னிற மீசை, வண்ணமயமான தலைப்பட்டை, மற்றும் “24-இன்ச் பைத்தான்கள்” (24-inch pythons) என அனைத்தும் WWE ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை. அவரது மறைவுக்கு பல மல்யுத்த வீரர்கள் மற்றும் பிரபலங்கள், ரிக் ஃபிளேர் (Ric Flair), ட்ரிபிள் எச் (Triple H), மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹோகனின் குடும்பம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் அன்புக்குரிய டெர்ரி போலியா, உலகம் முழுவதும் ஹல்க் ஹோகனாக அறியப்பட்டவர், இன்று தனது அன்புக்குரியவர்களுடன் இருந்தபோது காலமானார். அவரது நினைவுகளை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு அவர் விட்டுச் சென்றார்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்