கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் […]
கர்நாடகம்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் காலமானார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா 1932ல் பிறந்தார், இவரது முழுப்பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா. 1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். […]
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது, இயக்குனர் சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ப்ரொடக்ஷன் நம்பர் #17 யோகி பாபு வைத்து திரைப்படத்தை இயக்கிய, இன்னும் இரண்டு படங்கள் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு எடுக்க இருந்த நிலையில், அவரது திடீர் […]
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது. தற்போது, ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், அவரது உடல் 10 மணிக்கு மேல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதனிடையே, அவரது […]
DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள […]
RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால் இன்று காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விஜய் டிவியில் மூலம் பிரபலமான சேசு, அதன்பின் நடிகர் தனுஷ் […]
இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான தத்தாஜி கிருஷ்ணராவ் கெய்க்வாட் அவர்கள் இன்று குஜராத்தில், வதோதராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது காலமானார். அவரது வயது 95 ஆகும். இவரது மகன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆவார். ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.! முன்னாள் பரோடா மாநிலத்தில் உள்ள மகாராணி சிம்னாபாய் உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன் பின் 1957-1958 இல் […]
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் (83) இதயம் தொடர்பான நோய்களால் அவதிப்பட்ட வந்த அவர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 1975ல் வெளியான “நாளை நமதே” படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். இதன்பின், சந்திரமோகனை எம்ஜிஆர் தம்பி என்று தான் தமிழ் திரைத்துறையினர் அழைத்தனர். தமிழில் டைம், சகுனி உட்பட தென்னிந்திய மொழிகளில் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்திரமோகனுக்கு ஜலந்தரா […]
நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார். இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் காலமானார் என்று கூறப்படுகிறது. தற்போது, இவரது மறைவுக்கு திரையுலகம் பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 70 வயதாகும் இவர், ரகு பாலையாவாக தூத்துக்குடி பிறந்து வளர்ந்துள்ளார். இந்நிலையில், இவரது உடல் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு பிரபலங்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், இன்று காலமானார்.இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி இந்திய அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களின் முன்னோடியாக பிஷன்சிங் பேடி திகழ்கிறார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் […]
ஆன்மீகவாதிகள் மத்தியில் ஆதிபராசக்தியின் மறு உருவமாகவும், பக்தர்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுவோருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரது மறைவை அறிந்தவுடன் திராவிட கொள்கை பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆன்மீக சிந்தனை கொண்ட பிரதமர் மோடி வரை பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அரசு முறையில் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் […]
அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் (65) அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 2014-19 காலகட்டத்தில் எம்.பி-யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் வயோதிகம் காரணமாக காலமானார். முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வளவந்தல்புரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு,தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இவர் எழுதிய, திருக்குறள் கட்டுரை தொகுப்பு […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மஹராசன், எல்லாம் இன்பமயம் திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார். அவருக்கு வயது @ikamalhaasan நடித்த ‘கல்யாண ராமன்”, ‘மீண்டும் கோகிலா’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் (90), இன்று காலமானார். இவரது மகன்தான் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர், ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாஹா’ படங்களை இயக்கியவர். pic.twitter.com/vAscDpofOC — Actor Kayal Devaraj (@kayaldevaraj) June […]
இலங்கை அரசை ஊக்குவித்து வரும் மத்திய அரசையும் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் என பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டையப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது, காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டது. செந்தில்குமார், சாம்சன், மெசியா மற்றும் நாகராஜ் ஆகிய நான்கு பேரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டது. இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்ததாக சக மீனவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மூழ்கிய மீனவர்களை மீட்காமல் […]
முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் கடந்த 2 வாரங்களாக தூத்துக்குடி AVM மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர், நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் இந்த அமைச்சர்கள் […]
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் காலமானார். இந்தியா முழுவதும் 160க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டு இயங்கி வருகிறது ‘வாசன் ஐ கேர்’ மருத்துவமனை. இந்நிலையில், திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் இவருக்கு வயது 52 உடல்நிலை குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர், தற்போது மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் மாரடைப்பால் காலமானார் – முக ஸ்டாலின் இரங்கல் திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இறந்ததையடுத்து முக ஸ்டாலின் […]
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் கடந்த 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். இவர் சில நாட்களாக உடல் நல குறைவால் அவதி பட வந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.