பெரும் சோகம்…நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

daniel balaji

DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு திரைபிரபலன்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது டேனியல் பாலாஜியின் உடல் சென்னை புரசைவாக்கத்தில்  வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமீர், கெளதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். டேனியல் பாலாஜி உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss