சினிமா

‘காந்தாரா Chapter 1′ படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகிறது தெரியுமா?

Published by
பால முருகன்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 2022ஆம் ஆண்டு வெளியான இந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா, மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, ஸ்வராஜ் ஷெட்டி, அச்யுத் குமார், வினய் பிடப்பா, ஷைன் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தினை கேஜிஎப் படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்  எல்லா மொழிகளிலும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் ரீதியாக 360 கோடிகள் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் பரவி வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முத்தம் அவர் கூட தான் நடந்துச்சு! உண்மையை உளறிய பிரியா பவானி சங்கர்!

அதன்படி, ‘காந்தாரா’  படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ‘காந்தாரா 2’ என்று தலைப்பு வைக்காமல் காந்தார அத்தியாயம்1 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 27 அன்று சரியாக மதியம் 12:25 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த முறை  காந்தார அத்தியாயம் 1 இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், கடந்த முறை முதலில் கன்னம், தெலுங்கு, ஹிந்தியில் தான் வெளியானது. அதன் பிறகு வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தால் தான் ஒவ்வொரு மொழிகளிலும் வரிசையாக வெளியானது. ஆனால், இந்த முறை ஒரே நேரத்தில் படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும்.

KantaraChapter1 First Look on Nov 27th [File Image]

Recent Posts

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

7 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

5 hours ago