பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கபிலன், குகன், பார்த்திபன் என 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Pattukottai BJP Female person murder case - 3 person surrender

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பெண் சரண்யா எனவும், அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பெண்கள் பிரிவு நிர்வாகி எனவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்டது. மதுரையை சேர்ந்த சரண்யா திருமணம் ஆகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக 3 பேர் மதுரை கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய மூன்று பேரும் தற்போது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொலை எங்கு நடந்ததோ அங்குள்ள நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சரணடைந்த கபிலன் என்பவர், கொலை செய்யப்பட்ட சரண்யா கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் ஆவார். பாலனின் சொத்துக்களை கபிலனுக்கு அளிப்பதில் சரண்யா மறுப்பு தெரிவித்த காரணத்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என செய்திகள் உலா வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்