சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தோருக்கு இனி ரூ.1.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவுகள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 2025-ல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டம் பற்றி அறிவித்தார்.
சாலைகளில் விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1.50 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்து இருந்தார். விபத்து நேர்ந்த 7 நாட்கள் இத்திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம் என தெரிவித்து இருந்தார். கடந்த மார்ச் மாதமே இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்து இருந்த நிலையில் இன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், இனி சாலை விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இத்திட்டம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 17 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.