மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!
தான் தயாரித்த 'சுபம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கண்கலங்கியது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது உணர்ச்சிபூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது விழாவின் வீடியோ கிளிப் ஒன்று, இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதில், சமந்தா சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அவரது கண்களில் கண்ணீர் வருவதையும் தெரிகிறது. இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. வைரலான வீடியோவைத் தொடர்ந்து, சமந்தா வதந்திகளை தெளிவுபடுத்துவதற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சமந்தா, அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது எனவும் அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் எனது கண்கள் சென்சிடிவ் ஆகி, கண்ணீர் வரும் என்றும் தெரிவித்துள்ளார். தான் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால், இயற்கையாகவே எனக்கு கண்ணீர் வருகிறது. அதனாலே நான் அடிக்கடி கண்களை துடைக்கிறேன். ஆனால் நான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை போன்று, என்னுடைய மனநலனை கேள்விக்குள்ளாக்கி பலர் செய்திகளை வெளியிடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. நான் நலமுடன் உள்ளேன். இதற்குமுன் இதை கூறி இருந்தாலும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
#Samantha: “My eyes are really sensitive to bright light and they tend to water, which is why I need to keep wiping them (my eyes). It has nothing to do with my emotional well-being. I’m absolutely fine and happy and excited.”#Subham @Samanthaprabhu2 pic.twitter.com/JKpF9zWQlA
— Cinemania (@CinemaniaIndia) May 5, 2025