“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!
ஆர்யா என் வீடு நல்லா இல்லை என கூறி உடனடியாக இடித்து விட்டான் என்று சந்தானம் ஓப்பனாக விழா மேடையில் பேசியிருக்கிறார்.

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல’ என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படம் வருகின்ற மே 16 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் விளம்பரப்படுத்துவதில் படக்குழு முழு வீச்சில் உள்ளன.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “ஆர்யா என் உயிர் நண்பர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒன்றாக வேலை செய்தபோது நாங்கள் நெருக்கமாகிவிட்டோம் . ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் அதை வெற்றிகரமாகச் செய்தோம்” என்றார்.
நான் ஒரு பழைய வீட்டை வாங்கி ‘Renovation’ செய்து கொண்டிருந்தேன், அந்த சமயம் அங்கு வந்த ஆர்யா வீடு நல்லா இல்லை என கூறி உடனடியாக இடித்து விட்டான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு ஏற்ற வந்த என் அம்மா வீட்டை காணோம் என பதறி போன் செய்ததாகவும், அந்த அளவுக்கு எங்களது நட்பு நீண்டது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சேட்டை படத்துல டைட்டில் கார்டுல என் பெயர் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம்னு வரும். எனக்கே தெரியாம ஆர்யா இந்த வேலைய பாத்துருக்கான். நான் அடுத்து ரஜினி சாருடன் லிங்கா படத்துல நடிச்ச சமயத்துல அவர் என்ன கூப்பிட்டு கேக்குறாரு.
நீங்க தான் காமெடி சூப்பர் ஸ்டாரானு. எனக்கு தெரியாது சார், ஆர்யாதான் அப்படி போட்டான்னு சொன்னேன். அவரு, நீங்க சொல்லாமலா அவரு அப்படி போட்ருப்பாருனு கேட்டாரு. இப்படிலாம் என்ன சிக்கல்ல மாட்டிவிடுவான் ஆர்யா” என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.