30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!
30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முறையாகப் பின்பற்றுமாறு உணவு பாதுகாப்புத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
ஒரு லி. குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி:மெக்னீசியம் 5 முதல் 30 மி.கி இருத்தல் அவசியம். குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும்.
முறையான அனுமதி, உற்பத்தி, காலாவதி தேதி, குடிநீர் சுத்திகரிப்பு முறைகளை பின்பற்ற குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரமின்றி, முறையான அனுமதி இன்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை:
வெப்பத்தை அதிகமாக உமிழும் 20லி வாட்டர் கேனை மறுசுழற்சி செய்யும்போது பல புதிய கெமிக்கல்கள் உருவாகிறது. கேனை சுத்தம் செய்யவும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. RO முறையில் குடிநீரை நிரப்பும்போதும், சுத்தமாகத் தெரிவதற்காக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் ஒருவாரத்தில் 5 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக் நம் உடலுக்குள் சென்று கேன்சர், BP போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.