இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். சுதா கொங்கராவே இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகரான கிருத்திக் ரோஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
கிருத்திக் ரோஷன் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு தமிழில் இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜிவி தான் இந்தி ரிமேக்கிற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…