விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார்.
விஜய்யுடன் நேருக்கு நேர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ஒரு கலகலப்பான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது.
நேற்று வெளியான “ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன் விஜயிடம் எதாவது குட்டிக்கதை இருக்கா சார்..? என்று கேட்டிருந்தார் அதற்கு விஜய் எதுவும் ஸ்டாக் இல்லை என்று சிரித்துக்கொண்டே கூறியிருப்பார்” அந்த ப்ரோமோ நேற்று வைரலானது.
அந்த ப்ரோமோவை தொடர்ந்து சன்டிவி தற்போது இரண்டாவதாக ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோவில் நெல்சன் விஜயிடம் “தேர்தலில் வாக்களிக்க 4 கார்களை விட்டுவிட்டு ஏன் சைக்கிள் எடுத்துட்டு போனீங் என்று கேட்க, அதற்கு விஜய் “silent-ஆ இருக்கியா” என சிறிது கொண்டே சொல்வது போல ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…