மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.
ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை.
இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே பெரும்பாலான இடங்களில் போட்ட பணம் திரும்பி வந்துவிட்டதாம். அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம் மட்டும்தானாம்.
தென் இந்தியாவில் இந்த நிலைமை என்றால் வட இந்தியாவிலேயும் இதே நிலைமை தானாம். அங்கும் தியேட்டர்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றதாம். அதனை நேரில் பார்த்த சாட்சி நம்ம இயக்குனர் அட்லீ தானாம். அட்லீ தற்போது மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அவர் அங்கு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டுள்ளார். சந்தோஷத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது என வாழ்த்து கூறியுள்ளாராம்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…