நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு.!

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு.
நடிகரும், இயக்குனருமான மனோபாலா, கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இந்நிலையில், மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு, வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது என்று மனோபாலாவின் மகன் ஹரிஷ் பேட்டியளித்துள்ளார்.
மனோபாலா திரைப்பயணம்:
மனோபாலா சினிமாவிற்கு வந்த போது, இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர், 1979-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்திருந்தார்.
ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மனோபாலா ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். படங்களை இயக்கியது மட்டுமின்றி, சமுத்திரம், ரமணா, பிதாமகன், காக்கி சட்டை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாத்துறையில் 48 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் ‘The Lion King’ என்ற படத்தின் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.