g marimuthu [File Image]
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். ‘எதிர்நீச்சல்’ தொடரில் குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மாரிமுத்து மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட ரசிகர்கள் மற்றும் மக்களுடைய மனதில் என்றுமே இருப்பார்.
இந்நிலையில், மாரிமுத்து மண்ணைவிட்டு பிரிந்த நிலையில், அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி வீடியோக்கள் மற்றும் அவரை பற்றிய பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், உயிரோடு இருந்த சமயத்தில் விமானத்தில் செல்ல கனவுடன் இருந்துள்ளார். அந்த கனவை நிறைவேற்றி வைத்தது அந்த நடிகர் தான் என மாரிமுத்துவே பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், மாரிமுத்துக்கு விமானத்தில் செல்லவேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. ஒரு முறை அவர் ராஜ்கிரணுடன் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் அவரிடம் ராஜ்கிரண் மாரிமுத்து நீ விமானத்தில் போய் இருக்கிறாயா? என்று கேட்டுள்ளாராம். அதற்கு மாரிமுத்து இல்லை சார் நான் கீழே இருந்து பார்த்தது அவ்வளவு தான் என சற்று வருத்தமாக கூறினாராம்.
பிறகு ராஜ்கிரண் உனக்காக இன்று நாம் அனைவரும் விமானத்தில் போகிறோம் என கூறிவிட்டு அதற்கான டிக்கெட்களையும் புக் செய்துவிட்டாராம். பிறகு இரவு 7 மணிக்கு மாரிமுத்து மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்களாம். அது தான் மாரிமுத்துவின் முதல் விமான பயனும். அந்த விமான பயண கனவை ராஜ்கிரண் தான் நிறைவேற்றி வைத்துள்ளார்.
தன்னுடைய விமான பயண கனவை ராஜ்கிரண் நிறைவேற்றி வைத்துள்ளதை மாரிமுத்துவே பேட்டியில் தெரிவித்திருக்கும் நிலையில், பலரும் ராஜ்கிரணை பாராட்டி வருகிறார்கள். மேலும் மறைந்த நடிகர் மாரிமுத்து ராஜ் கிரானுடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் கண்ணும் கண்ணும்,புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…