rajinikanth and vijay [File Image]
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்துள்ள ரஜினி செய்தியாளர்களை சந்தித்து தலைவர் 170 படம் குறித்த கேள்விக்கும் லியோ படம் குறித்தும் பேசியுள்ளார்.
விமான நிலையத்திற்கு அவர் வந்ததை பார்த்த செய்தியாளர்கள் என்ன காரணத்துக்காக இங்கு வருகை என்று கேட்டனர். அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த் ‘புவனா ஒரு கேள்விக்குறி படப்பிடிப்பிற்கு பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன். இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகள் கழித்து இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள்.
ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா லியோ?
எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பதே என் வருத்தம்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் சார் லியோ படம் வருகிறது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” லியோ திரைப்படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது. படம் வெற்றிபெறுவதற்கு நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்” என கூறினார். லியோ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிகர் ரஜினி தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே விஜய் இந்த ரஜினியின் 171-வது படத்தின் கதையை கேட்டுவிட்டு 10 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு கதை எனக்கு பிடித்ததே இல்லை என்ற கூறியிருந்தார். அதைபோல ரஜினிகாந்தும் லோகேஷ் கனகராஜை தொடர்பு கொண்டு லியோ படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றிபெறும் என தெரிவித்தும் இருந்ததாக லோகேஷ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…