mgr AND nagesh MGR - [File image]
எம்.ஜி.ஆர் மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து நடித்த படங்களின் காமெடி காட்சிகள் எந்த அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், ரகசிய போலீஸ் 115, படகோட்டி, பட்டிக்காட்டு பொன்னையா, ஆசை முகம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது என்றே சொல்லலாம்.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் வெற்றிபெற்ற காரணத்தால் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் எம்.ஜி.ஆர் நாகேஷை தன்னுடைய படங்களில் நடிக்க தொடர்ச்சியாக ஒப்பந்தம் செய்தார். இடையில் சில காலம் நாகேஷிற்கு பட வாய்ப்புகள் கொடுக்காமல் அவருக்கு பதிலாக தேங்காய் ஸ்ரீனிவாசனை எம்ஜிஆர் கொண்டு வந்தார்.
அதற்கு முக்கிய காரணமே நாகேஷ் மீது எம்ஜிஆர் மிகவும் கோபத்தில் இருந்தாராம். ஏனென்றால், அந்த சமயம் பத்திரிகைகளில் நாகேஷ் எம்ஜிஆர் பற்றி தவறாக பேட்டியளித்த விட்டார் என செய்திகள் வெளியாக தொடங்கியது. இந்த செய்திகள் அனைத்தையும் உண்மை என நடிகர் எம்ஜிஆர் நம்பினாராம். இதன் காரணமாக தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த நாகேஷே தன்னை பற்றி தவறாக பேசியுள்ளார் என்று எம்ஜிஆர் மிகவும் கோபத்தில் இருந்தாராம்.
உதவி கேட்ட ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஆர்.ராதா!
இதன் காரணமாகத்தான் தன்னுடைய படங்களில் தேங்காய் ஸ்ரீனிவாசனை நாகேஷுக்கு பதிலாக கொண்டு வந்தாராம். பிறகு இந்த விஷயம் மெல்ல மெல்ல சர்ச்சையாக வெடித்த நிலையில் நாகேஷ் நான் எம்ஜிஆர்ரை பற்றி தவறாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை அது முற்றிலும் வதந்தி என்று விளக்கம் அளித்து இருந்தார்.
அதன் பிறகு இந்த பேட்டியை பார்த்த பின் எம்.ஜி.ஆருக்கு நாகேஷ் மீது இருந்த கோபம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியதாம். பின் தான் உலகம் சற்று வாலிபன் படத்தில் நடிக்க நாகேஷை அழைத்தாராம். இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…