நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வரம் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்த மைக் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய்க்கு அண்ணனாக 80 காலக்கட்டத்தில் உள்ள கெட்டப்பில் நடிக்க மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் விஜய்க்கு மற்றோரு அண்ணனாக தெலுங்கில் ஒரு நடிகரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்களாம்.
மோகன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது ஹரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…