vanangaan [File Image]
இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் விநாயகர் சிலையுடன் இருந்தார். இந்த போஸ்ட்டரை பார்த்தவுடனே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம்.
விஜய்க்காக அதை கூட பண்ணுவேன்! அரங்கத்தை அதிர வைத்த மிஷ்கின்!
இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் டெவில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா வணங்கான் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இந்த டெவில் படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவிற்கு பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட பாலா வணங்கான் படத்தில் உதவி இயக்குனராக மிஷ்கின் தான் பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனர் எல்லாம் கூட சொல்ல முடியாது படத்தையே அவன் தான் எடுத்திருக்கிறான். ஒரு காட்சியை அவனை தான் படமாக்க சொன்னேன். அந்த காட்சியை அவன் படமாக்கிய விதம் என்னுடைய கண்களில் அப்படியே இருக்கிறது.
படத்தில் அந்த காட்சியை எடுக்கும் போது ஒரே ஒரு பெண் கேமராவை பார்த்ததை கவனித்துவிட்டு என்னிடம் அதனை சொன்னான். அந்த அளவிற்கு மிகவும் ஷார்ப் ஆகா இருப்பான். இதனை பார்த்துவிட்து அவன் மீது எனக்கு மிகவும் பொறாமை வந்தது. அவன் இந்த அளவிற்கு ஆர்வமாக கவனிக்கிறான் என்றால் அவன் முன்னாடி எல்லாம் நான் ஒண்ணுமே இல்லை” என பாலா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…