MarkAntony OTT [File Image]
மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி “. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியாகும் போதே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது என்றே கூறலாம். எதிர்பார்த்ததை விட படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஓடிடியில் வருகிறது ‘மார்க் ஆண்டனி’
படத்தை திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் பார்த்தாலும் அதில் பார்க்க முடியாத ரசிகர்களுக்காகவே படம் ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி, மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 13 ( வெள்ளிக்கிழமை) அன்று அமேசான் பிரேம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பட்ஜெட் & வசூல்
மார்க் ஆண்டனி திரைப்படம் 28 லிருந்து 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் படம் வெளியான 3 வாரங்களில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. விஷால் சினிமா கேரியரில் அதிகம் வசூல் கொடுத்த திரைப்படமும் இது தான்.
படம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரேம் வாங்கியுள்ள நிலையில், படம் 13-ஆம் தேதி வெளியாகிறது. அதைப்போல படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை) யை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. விரைவில் நல்ல நாள் அன்று அதிலும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…