திரைப்படங்கள்

உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த ஜெயிலர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published by
பால முருகன்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.  படம் வெளியாகி 2 வரங்களாகியும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். இதுவரை படம் உலகம் முழுவதும் 520 கோடி வரை வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், படம் இதுவரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 525 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தவிர ஜெயிலர் திரைப்படம் எல்லா இடங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு தாக்கத்தை உருவாக்கி, ஆல் டைம் சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 70 கோடி வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் படம் 60 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதைப்போல படம் கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 525 கோடி வசூல் செய்து ஜெயிலர் படம் பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சியுள்ளது.

தமிழில் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2.0 திரைப்படம் இருந்தது. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இருந்த நிலையில், தற்போது அதனுடைய சாதனையை ஜெயிலர் படம் முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!

சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…

25 minutes ago

”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

49 minutes ago

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

1 hour ago

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

2 hours ago

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

5 hours ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

8 hours ago