திரைப்படங்கள்

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை இல்லை – சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி.!

Published by
கெளதம்

மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்துக்கு தடை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த்துளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஞ்சல் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உதயநிதி, அத்திரைப்படத்தில் முழுவதும் நடித்துக் கொடுப்பதற்குள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் இது தனக்கு கடைசி படம் எனவும் அமைச்சரான பிறகு உதயநிதி தெரிவித்தார்.

இதனையடுத்து, ஓடிஎஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன், தனது படம் அப்படியே கிடப்பில் போய்விடுமோ என்று அஞ்சி, ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றத்தில், மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 23ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூன் 28க்குள் உதயநிதி, மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

42 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

60 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

3 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago