40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகளை மாற்றும் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) வருண்குமார் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காவல்துறையின் வழக்கமான நடைமுறையின்படி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நிர்வாகக் காரணங்களால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகளை மாற்றும் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய பணியிடங்களில் ஆய்வாளர்களை நியமிப்பதன் மூலம் காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.