Eeram movie [File Image]
தமிழ் சினிமாவில் வெளியான பல த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரு விதமாக பயம் ஊட்டும் விதத்தில் இருக்கும். பல படங்கள் இதுவரை வந்தாலும் கூட கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு த்ரில்லர் கலந்த சூப்பரான படமாக மக்களுக்கு வெகுவாக பிடித்தது போல படத்தை அறிவழகன் வெங்கடாசலம் கொடுத்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன், ஹீரா செல்வராஜ், ஸ்ரீநாத், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சாயா சிங், கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதைப்படி, நடிகை சிந்து ஆதியை காதலிக்கிறார் சில காரணங்களால் இருவரும் சேர முடியாமல் போக சிந்துவிற்கு அவர்களுடைய வீட்டார் நந்தாவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். நந்தா தனது மனைவியாக நடித்திருந்த சிந்து மேனனுடன் வசித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் சிந்து மேனன் பற்றி தப்பாக கூற இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.
இது அப்டியே தொடர்ந்து கொண்டு செல்ல ஒரு கட்டத்தில் தன்னுடைய நல்ல மனநிலையை இழந்த நந்தா தனது மனைவியை கொலை செய்து விடுவார். பிறகு தனது மனைவியை தண்ணீருக்குள் வைத்து நந்தா கொடூரமாக கொலை செய்து விடுகிறார். இதன் பின் ஆவியான சிந்து தன்னுடைய கவனனை வைத்து தன்னை கொலை செய்ய யாரெல்லாம் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்களை பழிவாங்க முடிவெடுத்து அனைவரையும் தண்ணீராக மாறி பழிவாங்குவது தான் கதை.
ஒரு வேலை இந்த படத்தில் நீங்கள் அந்த சமயம் பார்கவில்லை இப்போது பார்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கு படம் சுமாராக இருப்பது போல தான் இருக்கும். ஆனால், அந்த சமயம் இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததை பார்த்து மக்கள் பலரும் கொலை நடுங்கினார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வெறும் தண்ணீரில் ஆவியாக வந்து கொலை செய்வதை அப்படியே நிஜமாகவே கட்டிருப்பார்கள்.
படத்தின் ஒளிப்பது அந்த சமயமே மிரள வைக்கும் வகையில் இருந்தது. தண்ணீர் வரும் இடங்கள் அதைப்போல த்ரில்லர் காட்சிகள் வரும் போது அதனை பார்க்க அப்படியே நிஜமாகவே நம்மளுடைய பக்கத்தில் ஒரு பெய் இருப்பது போல உணர்வை ஒளிப்பதிவில் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கொடுத்திருப்பார். இதே போன்ற திரில்லரான கதையை ஆங்கிலம் படத்தில் நாம் முன்பு பார்த்திருக்கலாம்.
ஆனால், தமிழ் சினிமாவில் முதன் முதலாக அப்படி ஒரு படம் வந்தது என்றால் ஈரம் படம் மட்டும் தான். ஒளிப்பதிவை தாண்டி தமனின் பின்னணி இசை காண்போரை கதிகலங்க வைத்தது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14-ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அறிமுக நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்றுவரை தமிழ் சினிமாவில் இது போல ஒரு வித்தியாசமான த்ரில்லர் படம் வருமா என்கிற அளவிற்கு இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கும். இந்த படம் வசூலில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…