நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், பேனர் விழுந்து, விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், யார் மீது கோபப்பட வேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல், லாரி ட்ரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் தளபதி விஜய் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் ட்வீட்டரில் ஹேஸ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமலஹாசன், யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரிண்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர் என்று நடிகர் விஜய் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…