rajinikanth and Nagma
Nagma சினிமாவில் பொதுவாக ஒரு படத்தின் கதை மேல் தனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் யோசிப்பது உண்டு. அதன்பிறகு அந்த படத்தில் வேறு பிரபலங்கள் நடித்து ஹிட் ஆகிவிட்டது என்றால் வருத்தப்படுவதும் உண்டு. அப்படி தான் நடிகை நக்மா ரஜினியின் மெகாஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகி அதன் பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சௌந்தர்யா நடித்து இருப்பார். வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து இருப்பார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை நக்மா தான் நடிக்க இருந்தாராம். நடிக்க கமிட் ஆகிவிட்டு ஷூட்டிங் செல்லவேண்டி இருந்த சமயத்தில் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவினரிடம் கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம். மற்ற படங்களின் கால்ஷீட் பிரச்னையா அல்லது கதை மீது நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால், படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு நக்மா திடீரென விலகியது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். பிறகு அவசர அவசரமாக படத்தில் நடிக்க வைக்க சௌந்தர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அவர் படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் அவரை விட யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருப்பார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…