நடிகர் சங்க தேர்தலுக்கு புதிய சிக்கல் ?தேர்தல் நடக்குமா ?

நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை கல்லூரிக்கு அளித்துள்ள விளக்கத்தில்,கல்லூரி உள்ள இடத்தில் முக்கியமான பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதையாக உள்ளது.குறிப்பாக நீதிபதிகள்,முதலமைச்சர்,அமைச்சர்கள் இந்த பாதை வழியே செல்கின்றனர் .எனவே இந்த கல்லூரியில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு அளிக்க சிரமம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல் அன்று 8000-க்கும் அதிகமானோர் கூட உள்ளதால் பாதுக்காப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025