“நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்”…காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

mk stalin kamarajar

சென்னை : ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று, அவருடைய 123வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

குறிப்பாக, சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற தலைவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், கல்வி மற்றும் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” எனவும் பதிவிட்டுள்ளார்.

அதைப்போல, தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “மதிய உணவு தந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் நினைவுகளை போற்றி வணங்குகிறேன். மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றும் போது ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காக நான் எடுத்த இந்த பெரும்முயற்சியை பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் என்னை பாராட்டியிருப்பார் என்று பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பேசியதை இங்கே நினைவு கூறுகிறேன்” எனவும் பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்